அரசியல் நெருக்கடியை தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் வெடித்துள்ள ஆர்ப்பாட்டங்கள்!
அரசியல் நெருக்கடியின் பின்னணியில், ஆயிரக்கணக்கான பொதுத்துறை ஊழியர்கள் பிரான்ஸ் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மார்சேயில் போராட்டக்காரர்கள் தரமான பொது சேவையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் பாரிஸிலும் ஆர்ப்பாட்டகாரர்கள் அணித்திரண்டுள்ளனர்.
பிரான்ஸ் பிரதமர் பதவியில் இருந்து மைக்கேல் பார்னியர் ராஜினாமா செய்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடனான ஒரு மணித்தியால சந்திப்பிற்குப் பின்னர் இன்று காலை எலிசீ அரண்மனைக்கு வந்த அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
புதிய பிரதம மந்திரி நியமிக்கப்படும் வரை பார்னியரும் அவரது அரசாங்கமும் காபந்து நிலையில் செயற்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.





