வார இறுதியில் லண்டனில் போராட்டங்கள் வெடிப்பு!
இந்த வார இறுதியில் லண்டன் முழுவதும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்த புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க மற்றும் ஈரானிய தூதரகங்களுக்கு அருகில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்கமைய ஸ்டேஜ் ஃபார் ஃப்ரீடம் (Stage for Freedom) ஏற்பாடு செய்த ஈரானிய அரசாங்க எதிர்ப்பு பேரணி, வைட்ஹாலில் (Whitehall) இருந்து ஈரானிய தூதரகம் வரை செல்லும்.
அதேபோல் அணு ஆயுதக் குறைப்புக்கான பிரச்சாரம் (CND) உள்ளிட்ட குழுக்களின் தனி போராட்டம், ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்தக் கோரி அமெரிக்க தூதரகத்திற்கு பேரணியாகச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த போராட்டங்களுக்கு பெருநகர காவல்துறை குறிப்பிட்ட நிபந்தனைகளை விதித்துள்ளது.
போராட்டக்காரர்கள் நியமிக்கப்பட்ட பாதைகளை கடைப்பிடித்து மாலை 5 மணிக்குள் தங்கள் பேரணிகளை முடிக்க வேண்டும், மேலும் ஈரானிய அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தில் பெருமளவிலான சத்தம் எழுப்புவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே லண்டனுக்கு வெளியே மற்றொரு குழு போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. அதாவது ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு பிரித்தானிய இராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்த ஸ்டாமர் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதற்கு எதிராகவும் போராட்டம் இடம்பெறவுள்ளது.





