ஐரோப்பா செய்தி

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இத்தாலியின் ரோமில் அணித்திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்!

“காசாவில் நடந்த இனப்படுகொலையைக் கண்டிக்கும்” நடவடிக்கையின் ஒரு பகுதியாக இத்தாலி முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்துள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் வந்துள்ளன.

பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் கீழ் உள்ள இத்தாலியின் தீவிர வலதுசாரி அரசாங்கம் இப்போதைக்கு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ரோமில் ஒன்றுக்கூடிய சுமார் 20,0000 மக்கள் “சுதந்திர பாலஸ்தீனம்!” என்று கூச்சலிட்டு பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிலர் கொலோசியம் வழியாக அணிவகுத்துச் சென்றனர், முன்பக்கத்தில் இருந்தவர்கள் “இனப்படுகொலைக்கு எதிராக. எல்லாவற்றையும் தடுப்போம்” என்று எழுதப்பட்ட ஒரு பெரிய பதாகையை ஏந்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி