நியூயார்கில் ட்ரம்ப் டவரை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டகாரர்கள் : 98 பேர் கைது!

குடியேற்ற அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பாலஸ்தீன ஆதரவு ஆர்வலரை விடுவிக்கக் கோரி, யூத போராட்டக்காரர்கள் நியூயார்க் நகரில் உள்ள டிரம்ப் டவரை முற்றுகையிட்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டு இஸ்ரேலின் போருக்கு எதிராக கொலம்பியா பல்கலைக்கழக போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய மஹ்மூத் கலீல் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவரை விடுவிக்கக்கோரி மன்ஹாட்டனில் உள்ள கட்டிடத்தின் வாயிலை 150 போராட்டகாரர்கள் முற்றுகையிட்டனர்.
யூதர்கள் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துங்கள் என்று கூறுகிறார்கள்” என்று எழுதப்பட்ட சிவப்பு சட்டைகளை அணிந்து, “மஹ்மூத்தை இப்போது வீட்டிற்கு அழைத்து வாருங்கள் எனவும் அவர்கள் கோஷமிட்டனர்.
இந்நிலையில் அத்துமீறல், தடை மற்றும் கைது செய்யப்படுவதை எதிர்த்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் 98 பேர் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.