மட்டக்களப்பில் சுமன ரத்ன தேரர் தலைமையில் போராட்டம் : ஜனாதிபதிக்கு எதிராக அநாகரிகமான வார்த்தை பிரயோகம்
மட்டக்களப்பு நகரில் மயிலத்தமடு பகுதியில் காணி அபகரிப்புகளை முன்னெடுத்துள்ள சிங்களவர்கள் அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ஜனாதிபதிக்கு எதிராகவும் பொலிஸாருக்கு எதிராகவும் அநாகரிகமான வார்த்தை பிரயோகத்தினை பயன்படுத்தி பேசியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் புனித மைக்கேல் கல்லூரியின் 150வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி கலந்துகொண்ட போது அவரை சந்திப்பதற்கு ஊர்வலமாக சென்று பாடசாலைக்கு செல்லும் வழியில் பொலிஸார் வழிமறித்து செல்ல தடைவிதித்த நிலையில் பொலிஸாருக்கும் அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் பொலிஸாருக்கு எதிராக கடுமையான விமர்சித்தார்.
இதன்போது கைகளில் தும்புத்தடிகளையும் ஈக்கு தடிகளையும் வைத்துக்கொண்டு பொலிஸாருக்கும் ஜனாதிபதிக்கும் எதிரான கடுமையாக பேசியதுடன் சாணக்கியனுக்கு எதிராகவும் கடுமையான வார்த்தைகளினால் பேசியதாக தெரிக்கப்படுகின்றது
மதியம் 11.00மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 5.30மணி வரையில் நடைபெற்றது.
இதன்போது அம்பிட்டிய சுமனரத்ன தேரரினால் செய்தி சேகரித்திக்கொண்டிருந்த பெண் ஊடகவியலாளர் ஒருவரும் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் இங்கு பதிவாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் கலகம் அடக்கும் பிரிவினர் தயார் நிலையில் வைத்திருந்ததுடன் பிக்குகள் புனித மைக்கேல் கல்லுரிக்கு அருகில் நின்று சுமார் மூன்று மணித்தியாலத்திற்கு மேலாக இடையூறுகளை ஏற்படுத்தியபோதிலும் அவர்களை அகற்றுவதற்கு எந்தநடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது,