பங்களாதேஷை போல பாகிஸ்தானிலும் போராட்டம்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் விடுதலை செய்யுமாறு பாகிஸ்தான் மாணவர் கூட்டமைப்பு அந்நாட்டு அரசாங்கத்திற்கு இறுதி கடிதம் அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷில் “மாற்றத்திற்கு எதிரான மாணவர்கள்” இயக்கத்தின் வெற்றியால், அந்நாட்டு அரசை கவிழ்த்துள்ள நிலையில், பாகிஸ்தான் மாணவர் கூட்டமைப்பு இளைஞர்கள் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்ற எண்ணம் இருப்பதாக தெரிகிறது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தங்களது கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால், நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும், இது பாகிஸ்தானின் தற்போதைய அரசியல் சூழலை மோசமாக்கும் என்றும் பாகிஸ்தான் மாணவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இம்ரான் கானை விடுவிக்காவிட்டால் இஸ்லாமாபாத்தில் இம்மாத இறுதியில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என இம்ரான் கானின் பாகிஸ்தான் தாரிக் இ இன்சாப் கட்சி அறிவித்துள்ளது.