ஈரானுக்கு ஆதரவாக லண்டனில் போராட்டம் – கொடியை அகற்றியதால் பதற்றம்!
ஈரானில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவின் கென்சிங்டனில் (Kensington) நேற்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் 500 முதல் 1,000 பேர் வரை கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நபர் ஒருவர் லண்டனில் உள்ள ஈரானிய தூதரகத்தில் பறக்கவிடப்பட்டிருந்த கொடியை அகற்றியுள்ளார். இது தொடர்பான காணொளி எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
குறித்த நபர் கட்டிடத்தின் மீது ஏறி தற்போதைய ஈரானிய கொடியை அகற்றியதுடன், இஸ்லாமியப் புரட்சிக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட கொடியை ஏற்றியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளனர்.





