பங்களாதேஷ் பிரதமர் பதவி விலகக் கோரி போராட்டம்
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி 100,000க்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்கெடுப்பை அனுமதிக்க பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
இரு பிரதான எதிர்க்கட்சிகளான வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) மற்றும் மிகப்பெரிய இஸ்லாமியக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகியவற்றின் 100,000-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் டாக்காவில் திரண்டு போராட்டம் நடத்தியதாக என்று கூறப்படுகிறது.
தற்போதைய பிரதமர் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பதாகவும், அவரது அரசாங்கம் ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், வன்முறையைத் தடுக்க குறைந்தது 10,000 பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் மற்றும் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தியதாக அறிக்கைகள் மேலும் தெரிவித்தன.