மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி போராட்டம்!
மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறுகோரி நாடு தழுவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்துவது குறித்து எதிரணி ஆராய்ந்துவருகின்றது.
சட்ட திருத்தம் ஊடாக பழைய முறையிலேயே தேர்தல் நடத்தும் சூழல் உள்ள நிலையில், அதனை இழுத்தடிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என எதிரணி குற்றஞ்சாட்டிவருகின்றது.
இந்நிலையிலேயே தேர்தல்கோரி கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தி, அக்கோரிக்கை தொடர்பில் மக்கள் ஆதரவைப் பெறுவதற்கு எதிரணி திட்டமிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அனைத்து எதிரணிகளும் இணைந்தே கூட்டு அரசியல் சமராக இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளன என்று தெரியவருகின்றது.
தாம் ஆட்சிக்கு வந்தால் ஓராண்டு காலப்பகுதிக்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற உறுதிமொழியை தேசிய மக்கள் சக்தி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.





