ட்ரம்புக்கு எதிராக போராட்டம்: கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு!
வெனிசுலா மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையை கண்டித்து கொழும்பில் இன்று (05) மாலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட மக்கள் போராட்ட இயக்கத்தினரால் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இடதுசாரி அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
வெனிசுலா இறையாண்மைமிக்க சுதந்திர நாடெனவும், அதன்மீதான ஆக்கிரமிப்பு மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி கைது போன்ற நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
போரை உருவாக்கி, எண்ணைவளத்தை கொள்ளையடிக்க முற்படுகின்றனர் எனவும் குற்றஞ்சாட்டினர்.
இப்போராட்டத்தால் அமெரிக்க தூதரகத்துக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்; ட்ரம்ப்மீது முன்னிலை சோசலிசக் கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
அதேபோல இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மௌனம் காப்பது கவலையளிக்கின்றது எனவும் குறிப்பிட்டனர்.





