மெக்ஸிகோவில் நெடுஞ்சாலைகளில் இடம்பெறும் கொலை, கொள்ளைகளை எதிர்த்து போராட்டம்!
நெடுஞ்சாலை கொள்ளைகளின் போது ஓட்டுநர்கள் கொல்லப்படுவதை எதிர்த்து மெக்ஸிகோ நகருக்கு வெளியே நெடுஞ்சாலைகளில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் காரணமாக சில இடங்களில் போக்குவரத்துகள் தாமதமாகியதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அரசாங்கம் நெடுஞ்சாலை ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியே மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மெக்சிகோவில் நெடுஞ்சாலைகளில் நீண்ட காலமாக ட்ரக்குகளை திருடர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இதன்போது பொருட்கள் மாத்திரம் தான் கொள்ளையிடப்பட்டது. ட்ரக்குகளை அவ்விடத்திலேயே விட்டுச் சென்றனர்.
ஆனால் தற்போது டிரைவர்களைக் கொன்று லாரிகளை எடுத்துச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சில வகையான இரட்டை-அரை டிரெய்லர்களைத் தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். மேலும் சில வகையான கட்டணங்களை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.