நியூசிலாந்தில் 03 மாவோரி எம்.பி.க்களை நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்ய முன்மொழிவு!

நியூசிலாந்தில் 03 மாவோரி எம்.பி.க்களை நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு அமர்வின் போது ஹாகாவை எதிர்த்ததற்காக குறித்த மூவரும் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற குழு முன்மொழிந்துள்ளது.
எதிர்க்கட்சி எம்.பி. ஹனா-ரௌஹிதி மைபி-கிளார்க், நாட்டின் ஸ்தாபக ஒப்பந்தத்தை மறுவரையறை செய்வதற்கான சர்ச்சைக்குரிய மசோதாவை அவரது கட்சி ஆதரிக்கிறதா என்று கேட்ட பிறகு, பாரம்பரிய குழு நடனத்தைத் தொடங்கினார் – பின்னர் அது நிராகரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்தே குறித்த எம்பிகள் இடைநீக்கம் செய்யப்படவுள்ளனர்.
மேலும் டெ பட்டி மாவோரி (மாவோரி கட்சி) இணைத் தலைவர்கள் ராவிரி வைடிட்டி மற்றும் டெப்பி ந்கரேவா-பேக்கர் ஆகியோரை 21 நாட்கள் தடை செய்ய பரிந்துரைத்தது.
(Visited 1 times, 1 visits today)