தைவானில் தகுதியற்றவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து நீக்க முன்மொழிவு!

தைவானின் பிரதான எதிர்க்கட்சியான கோமிண்டாங் கட்சி முன்மொழிந்த புதிய வரைவின் அடிப்படையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சியின் முன்மொழிவுகள் நீதித்துறை அமைப்பில் சீர்திருத்தங்கள் மற்றும் தகுதியற்ற அரசாங்க அதிகாரிகளை அகற்றுவது தொடர்பான புதிய சட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
எவ்வாறாயினும், முன்மொழியப்பட்டுள்ள சட்டங்கள் நாட்டின் அரசியலமைப்பிற்கு எதிரானது என ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சி கூறுகிறது.
இதன்படி, ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபைக்குள் நுழைய முடியாதவாறு எதிர்க்கட்சியினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
(Visited 30 times, 1 visits today)