சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவான பொருட்களுக்கு நிலையான கட்டணம் விதிக்க முன்மொழிவு!
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறைந்த மதிப்புள்ள ஆர்டர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் கட்டணம் விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி நுகர்வோருக்கு நேரடியாக இறக்குமதி செய்யப்படும் 150 யூரோவிற்கு குறைந்த விலையுள்ள பொருட்களுக்கு வரி விதிக்கப்படாது. அதற்கு பதிலாக நிலையான கட்டணங்கள் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தில் , சிறிய பொட்டலங்களுக்கு இரண்டு யூரோ நிலையான கட்டணத்தை விதிக்க முன்மொழியப்பட்டது.
இதற்கமைய மேற்படி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் மரோஸ் செஃப்கோவிக் (Maros Sefcovic) அடுத்த ஆண்டுக்கான தற்காலிக தீர்வுக்கு உடன்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
வேகமாக மாறிவரும் வர்த்தக யதார்த்தங்களை எதிர்கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் தனது நிலைப்பாட்டை வலுப்படுத்துவதை உறுதி செய்வதில் இது ஒரு முக்கியமான படியாகும்” என்றும் அவர் கூறியுள்ளார்.





