விக்டோரியாவில் குற்றங்கள் வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கடந்த 12 மாதங்களில் குற்றச் சம்பவங்கள் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாகக் குற்றப் புள்ளியியல் நிறுவனம் (CSA) எச்சரித்துள்ளது.
வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் சுமார் 6 இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான குற்றங்கள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக, கார் திருட்டு மற்றும் சொத்து தொடர்பான மோசடிகள் கடந்த ஆண்டை விட 14.2 சதவீதம் அதிகரித்துள்ளன.
கார் திருட்டுகளைப் பொறுத்தவரை 37,000-லிருந்து சுமார் 2 இலட்சத்து 45 ஆயிரமாக உயர்ந்துள்ளமை பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாரா ரேஞ்சஸ் (Yarra Ranges), நாக்ஸ் (Knox) மற்றும் மாரூண்டா (Maroondah) ஆகிய பகுதிகள் அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இது தவிர, 2016-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக மோசமான குடும்ப வன்முறைத் தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள புள்ளிவிவர நிபுணர் பியோனா டவுஸ்லி, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.





