ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் தடை செய்யப்பட்ட பிரபல முஸ்லிம் அமைப்பு

மனித உரிமைகள் மற்றும் நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாகக் குற்றம் சாட்டி, ஜெர்மன்(German) அரசாங்கம் ஒரு முஸ்லிம் அமைப்பிற்கு தடை விதித்துள்ளது.

தடை செய்யப்பட்ட முஸ்லிம் இன்டராக்டிவ்(Muslim Interaktiv) அமைப்பு பெண்கள், சிறுபான்மையினருக்கு எதிரான யூத எதிர்ப்பு மற்றும் பாகுபாட்டை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் அரசியலமைப்பு ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“இஸ்ரேல் மற்றும் யூதர்களின் அரசுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுபவர்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் எவருக்கும் சட்ட ரீதியாக பதிலடி கொடுப்போம்” என்று ஜெர்மன் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரின்ட்(Alexander Dobrindt) குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜெனரேஷன் இஸ்லாம்(Generation Islam) மற்றும் ரியாலிட்டி இஸ்லாம்(Reality Islam) ஆகிய இரண்டு முஸ்லிம் குழுக்களுக்கு எதிராக விசாரணைகள் நடந்து வருவதாகவும் விரைவில் இந்த குழுக்களும் தடை செய்யப்படும் என்றும் அலெக்சாண்டர் டோப்ரின்ட் தெரிவித்துளளார்.

இந்நிலையில், ஜெர்மனியில் முஸ்லிம் தீவிரவாதத்திற்கு எதிரான நன்கு அறியப்பட்ட ஆர்வலரான அஹ்மத் மன்சூர்(Ahmad Mansour), “இந்த குழுவை தடை செய்தது சரியானது மற்றும் அவசியமானது” என்று Xல் பதிவிட்டு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜெர்மன் அரசாங்கம் சமீபத்திய ஆண்டுகளில் தீவிரவாதம், பல தீவிர வலதுசாரி மற்றும் முஸ்லிம் அமைப்புகளுக்கு எதிராக கடுமையாக செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!