மடகாஸ்கரின் புதிய பிரதமராக பிரபல தொழிலதிபர் நியமனம்

இந்த மாதம் மடகாஸ்கரின் ஆட்சியைக் கைப்பற்றிய CAPSAT ராணுவ தளபதி மைக்கேல் ராண்ட்ரியானிரினா (Michel Randrianirina), தொழிலதிபரும் ஆலோசகருமான ஹெரிண்ட்சலமா ரஜஓனரிவேலோவை (Herintsalamah Rajaonarivelo) நாட்டின் பிரதமராக நியமித்துள்ளார்.
மேலும், புதிய தேர்தல்களை நடத்துவதற்கு முன்பு, இராணுவம் இரண்டு ஆண்டுகள் வரை ஒரு சிவில் அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சி செய்யும் என்று மைக்கேல் ராண்ட்ரியானிரினா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் வன்முறையாக மாறிய போராட்டங்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா (Andry Rajoelina) அக்டோபர் 13ம் திகதி நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, வெள்ளிக்கிழமை மைக்கேல் ராண்ட்ரியானிரினா ஜனாதிபதியாக பதவியேற்றார்.
இந்நிலையில், ராண்ட்ரியானிரினாவின் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு ஐக்கிய நாடுகள் சபையாலும், ஆப்பிரிக்க ஒன்றியத்தாலும் கண்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மடகாஸ்கரின் ஜனாதிபதியாக பதவியேற்ற ராணுவ தளபதி மைக்கேல் ராண்ட்ரியானிரினா (Michel Randrianirina)