இலங்கை : புலமை பரிசில் பரீட்சை முடிவுகளை வெளியிட தடை!
அண்மையில் முடிவடைந்த ஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று (18) இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்ட விதத்தை சவாலுக்கு உட்படுத்தி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்ததன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திரு.பிரிதி பத்மன் சூரசேன, திரு. அச்சல வெங்கப்புலி மற்றும் திரு.மகிந்த சமயவர்தன ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.





