அமெரிக்காவின் நலனுக்காக ஆய்வுக் கப்பல்கள் இலங்கை வர தடை – கம்மன்பில
இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்ட்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிவிவகார செனட் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் எலிசபெத் ஹோஸ்ட் வழங்கிய பதில்கள் நாட்டுக்கு பாதகமான சூழ்நிலையை உருவாக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கம்மன்பில இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் விருப்பத்தினாலேயே இலங்கைக்கான ஆய்வுக் கப்பல்களின் வருகை ஒரு வருடத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில இங்கு தெரிவித்துள்ளார்.
எலிசபெத் ஹோர்ஸ்ட் தனது நிலைப்பாட்டை அங்கீகரிப்பதற்காக வெளிவிவகாரங்களுக்கான செனட் கமிட்டியின் முன் ஆஜராகியபோது அவர் வெளியிட்ட அறிக்கையிலிருந்து இது தெளிவாகிறது என்று அவர் கூறியுள்ளார்.
எலிசபெத் ஹோஸ்ட் இந்த செனட் குழுவின் முன் கடன் மறுசீரமைப்பு செயல்முறை, சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துதல், இராஜதந்திர உறவுகளைப் பேணுதல், அரசாங்கத்துடன் புதிய கொள்கைகளை அமல்படுத்துதல், வெளியுறவுக் கொள்கை உட்பட பல யோசனைகளை வெளிப்படுத்தினார்.