இலங்கையில் பாடசாலைகளில் மேலதி வகுப்புகளை நடத்த தடை!

ஊவா மாகாணத்தில் மேலதிக வகுப்புக்கள் இன்று புதன்கிழமை முதல் தடை செய்யப்பட்டுள்ளன.
ஊவா மாகாண பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு பாடசாலை நேரத்திற்கு மேலதிகமாக ஆசிரியர்களால் நடத்தப்படும் கட்டணம் அறவிடப்படும் மேலதிக வகுப்புக்களே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை தடை உத்தரவை பின்பற்றாத ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
(Visited 10 times, 1 visits today)