ஜெர்மனியில் அமுலுக்கு வந்துள்ள நடைமுறைகள்!
ஜெர்மனி நாட்டில் பிளாஸ்டிக் போத்தல்களுக்கு தண்டபணம் அறவிடப்படும் என்ற அறிவித்தல் வெளியாகியுள்ளது.
ஜனவரி முதலாம் திகதியில் இருந்து பிளாஸ்டிக் போத்தல்களுக்கு 25 சென்ட் தண்ட பணம் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில் வருமான வரி கட்டுகின்றவர்களுக்கு அடிப்படை சம்பளமாக 11 784 யூரோ உழைக்கும் பொழுது அவர்கள் அதற்கு மேற்பட்ட தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்பதும் புதிய சட்டத்தின் விளக்கமாகும்.
இதேவேளையில் கிண்ட பிரைக்பெற்றாக் என்று சொல்லப்படுகின்ற வேலை செய்யும் பெற்றோர்களின் குழந்தைகளை காட்டி வருமான வரியில் இருந்து விலகுவதற்குரிய தொகையானது 6612 யூரோவாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் வாகன சாரதி பெற்று வைத்து இருப்பவர்களுக்கும் அதாவது ரோஸ் கலரில் வாகன அனுமதி சாரதி பத்திரம் பெற்றிருப்பவர்கள் குறிப்பாக 1965 ஆம் ஆண்டுக்கும் 1970 ஆம் ஆண்டுக்கும் இடையில் பிறந்து இருந்தால் அவர்கள் ஜனவரி மாதத்தில் டிஜிடல் முறையில் புதிய வாகன சாரதி அனுமதி பத்திரத்துக்கு மாற்ற வேண்டும் என்பது புதிய சட்டமாகும்.