கனடாவில் வசித்து வரும் உக்ரைனியர்களுக்கு சிக்கல் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

கனடாவில் வசித்து வரும் உக்ரைனியர்களின் விசா காலம் இந்த (2025) ஆண்டுடன் காலாவதியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் தொடர்ந்து ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதால், கனடா-உக்ரைன் அறக்கட்டளை போன்ற குழுக்கள் ஒட்டாவாவை தங்கள் விசாக்களை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு தானாகவே நீட்டிக்க வலியுறுத்துகின்றன.
பிப்ரவரி 2022 இல் ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கிய பிறகு, கிட்டத்தட்ட 300,000 உக்ரேனியர்களுக்கு கனடா-உக்ரைன் அவசர பயணத்திற்கான அங்கீகாரம் (CUAET) திட்டத்தின் கீழ் விசா வழங்கியது.
கனடாவில் வசிக்கவும் வேலை செய்யவும் மூன்று ஆண்டு விசாக்கள் வழங்கப்பட்டன. ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் பலரின் விசாக்கள் காலாவதியாகும் தருவாயில் இருப்பதால், CUAET வைத்திருப்பவர்கள் இப்போது மூன்று ஆண்டு நீட்டிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.