பிரித்தானியாவில் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்த பெண்ணுக்கு சிக்கல்!
பிரித்தானியாவில் கடந்த 03 ஆண்டுகளில் இரண்டாயிரம் முறைக்கு மேல் 999 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்திய பெண் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வடக்கு லண்டனில் உள்ள ஹாரோவைச் சேர்ந்த சோனியா நிக்சன், என்ற பெண்ணே இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2021 மற்றும் 2023 க்கு இடையில் அவசரகால தொலைபேசிக்கு வேறு வேறு தொலைப்பேசி எண்களில் இருந்து அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். இதற்காக அவர் 17 தொலைபேசி எண்களை பயன்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் மட்டும் அவர் 1,194 முறை அழைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு 22 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
999 அமைப்பை அவர் தவறாகப் பயன்படுத்தியது, உண்மையான அவசரநிலைகளுக்கு ஆபரேட்டர்கள் எவ்வளவு விரைவாக பதிலளிக்க முடியும் என்பதில் “குறிப்பிடத்தக்க தாக்கத்தை” ஏற்படுத்தியதாக மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.