செய்தி விளையாட்டு

இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணிக்கு கிடைத்த பரிசு தொகை

16 அணிகள் பங்கேற்ற 14வது பெண்கள் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது.

இதில் பாசெல் நகரில் அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியன் ஸ்பெயின் அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் வழக்கமான 90 நிமிடங்களில் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதையடுத்து ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் கோல் எதுவும் விழவில்லை.

இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கியது.

இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி போட்டி கட்டணம், லீக் வெற்றி, கோப்பைக்கான பரிசு என மொத்தம் €41 மில்லியன் வென்றுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!