இலங்கை: தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்து தனியார் பேருந்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து ஒன்று தீப்பிடித்து பகுதியளவில் எரிந்து நாசமானது.
இச்சம்பவம் தொடங்கொட பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்ததுடன், சம்பவத்தின் போது சாரதியும் மற்றுமொரு நபரும் மாத்திரமே பயணித்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இருவர் காயமின்றி உயிர் தப்பினர்.





