தனியார் வங்கிக் கொள்ளை: உக்ரைனிய தம்பதியினர் கைது-நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
தனியார் வங்கியொன்றின் மூன்று கணக்குகளை ஊடுருவி சுமார் 13.7 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட உக்ரைனிய பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய நேற்று (ஆக. 17) பிணை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான உக்ரைன் பெண்ணின் கணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் அனுமதியின்றி வங்கிக் கணக்குகளை பிரவேசித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) நீதிமன்றில் அறிவித்தது.
சந்தேகநபர் பின்னர் இரண்டு தடவைகளில் உக்ரேனிய பெண்ணுக்கு சொந்தமான பிரமிட் மோசடி கணக்குகளில் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு பணத்தை டெபாசிட் செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.
உக்ரேனிய பெண்ணுக்கு பிணை வழங்கிய நீதவான், அவர் வெளிநாடு செல்வதற்கு மேலும் தடை விதித்ததுடன், தலா 10,000,000 ரூபா பெறுமதியான இரண்டு பிணைகளையும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.