பிரான்ஸில் இரவோடு இரவாக தாக்கப்பட்ட சிறைச்சாலைகள் – அதிகாரிகளுக்கும் அச்சுறுத்தல்!

பிரான்ஸில் பல சிறைச்சாலைகள் இரவோடு இரவாக தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த தாக்குதல் சம்பவம் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தெற்கு நகரமான டூலோனில் உள்ள சிறைச்சாலையில் அடையாளம் தெரியாத தாக்குதல்காரர்கள் தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் நாடு முழுவதும் வாகனங்கள் எரிக்கப்பட்டதாகவும், ஊழியர்கள் அச்சுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர் அலுவலகம் செவ்வாயன்று விசாரணையைப் பொறுப்பேற்றுள்ளதாகக் கூறியது, அதே நேரத்தில் நாட்டின் DGSI தேசிய பாதுகாப்பு விசாரணையும் இதில் பங்கெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)