ஐரோப்பா செய்தி

இங்கிலாந்து சிறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் கைதிகள் – பலர் வைத்தியசாலையில்!

இங்கிலாந்து சிறையில்   பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக  உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பலரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகாரிகள் தற்போது சட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக அறிவித்துள்ளனர்.

சிறை பாதுகாப்பு கொள்கை கட்டமைப்பை கைவிட்டதாக குற்றம் சாட்டி இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் நீதித்துறை செயலாளர் டேவிட் லாமிக்கு ( David Lammy) கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த பலரின் நிலை விரைவாக மோசமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன்,  ஒருவர்  51 நாட்களாக உணவை தவிர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

உடல்நிலை மோசமடைந்தவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செயல்பாட்டாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட நிறுவனம், 24 மணி நேரத்திற்குள் அவசர பதிலையும், கைதிகளின் உடல்நலம் குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தையும் கோருகிறது, அதிகரித்து வரும் மரண ஆபத்து குறித்தும் எச்சரித்துள்ளது.

பாலஸ்தீன நடவடிக்கையை பயங்கரவாதக் குழுவாக தடை செய்தல், இஸ்ரேலுடன் தொடர்புடைய பாதுகாப்பு நிறுவனங்களை மூடுதல், கைதிகளுக்கு உடனடி பிணை மற்றும் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை  முன்வைத்தே இந்த  போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!