பிரேசிலில் சிறையில் இருந்து கைதிகள் தப்பியோட்டம்!
வடகிழக்கு பிரேசிலில் உள்ள அதிகபட்ச பாதுகாப்பு சிறையிலிருந்து இரண்டு கைதிகள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொசோரோ நகரில் உள்ள கூட்டாட்சி சிறைச்சாலையில் இருந்து அவர்கள் தப்பியோடிள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களை தேடும் பணியில் 300 பாதுகாப்பு முகவர்கள் ஈடுபட்டுள்ளதாக நீதி அமைச்சர் ரிக்கார்டோ லெவன்டோவ்ஸ்கி தெரிவித்தார்.
இரண்டு கைதிகளும் ஒரு பெரிய பிரேசிலிய குற்றக் கும்பலுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மொசோரோவின் சிறைச்சாலையின் உயர்மட்ட நிர்வாகம் அகற்றப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசால் அனுப்பப்பட்ட இடைக்கால நிர்வாகி தற்போது சிறைச்சாலையின் பொறுப்பில் இருப்பதாகவும், அது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் லெவன்டோவ்ஸ்கி கூறினார்.
இந்த சீரமைப்பு பணிகள் அவர்கள் தப்பிப்பதற்கு எளிதாக இருந்திருக்கும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.