அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல் செய்தியை வெளியிட்ட இளவரசி கேட்
பிரிட்டனின் வேல்ஸ் இளவரசி கேட், ஜனவரி மாதம் வயிற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு, தனது மூன்று குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, தனது முதல் பொதுச் செய்தியில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாதங்களாக உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் நன்றி” என்று X இல் ஒரு செய்தியில் கேட் பதிவிட்டுள்ளார்.
மேலும் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.





