இளவரசர் ஹரி மக்களால் விரும்பப்படாதவர் – அதிர்சியளிக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகள்!
இங்கிலாந்தில் கேட் மிடில்டனைப் போல மேகன் மெர்கலை யாரும் விரும்பவில்லை என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
அதாவது பிரித்தானியாவில், Meghan Markle பற்றிய மக்களின் கருத்து வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
யூகோவ் நடத்திய கருத்துக்கணிப்பில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்களில் 68 வீதமானோர், இளவரசர் ஹரியின் மனைவியை பற்றி எதிர்மறையான பார்வையைக் கொண்டுள்ளனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து மேகன் மீதான பொதுமக்களின் நிகர சாதகத்தன்மை -47 வீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இளவரசர் ஹரியும், மக்களால் விரும்பப்படாதவர் என கருத்துக்கணிப்பு எடுத்துக்காட்டியுள்ளது.
மேலும் 10 பேரில் 6 பேர் சார்லஸ் மன்னரைப் பற்றி நேர்மறையான பார்வையைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுவதுடன், அவருடைய நிகர சாதகத்தன்மை 32 ஆக காணப்படுகிறது.