இளவரசர் ஹாரி உக்ரேனுக்கு திடீர் விஜயம் ; போரில் காயமடைந்தோருக்கு உதவுவதாக சபதம்

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 296வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில், இங்கிலாந்து இளவரசர் ஹாரி திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார். போர் தொடங்கியபின் உக்ரைனுக்கு ஹாரி மேற்கொள்ளும் 2வது பயணம் இதுவாகும்.
அவர் இன்று உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ளார். ரெயில் மூலம் உக்ரைன் என்ற ஹாரி போரில் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வரும் தேவையான நடவடிக்கை எடுப்போல் என்று கூறினார். அவர் உக்ரைன் உயர் அதிகாரிகளை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)