நிதியை வீணடித்த பிரதமர் – இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு!
பிரதமர் ஹரிணி அமர சூரிய மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வி சீர்திருத்தங்களுக்காக 500 மில்லியன் ரூபாயை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றஞ் சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின்பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மேற்படி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் தாக்கல் செய்யப்படும் முறைப்பாடுகள் எப்போதும் இலஞ்சமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் முறைப்பாடளிக்கலாம்.
கல்விக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நிதியை வீணாவதற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய பொறுப்பேற்க வேண்டும். ஆகவே முறைப்பாடு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.





