உலக பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்க பிரதமர் சுவிஸ் பயணம்!
உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்த மாநாடு World Economic Forum (WEF) இன்று (19) ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் Switzerland டாவோஸ் Davos நகரில் ஆரம்பமாகின்றது.
இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya இலங்கை நேரப்படி இன்று அதிகாலை சுவிட்சர்லாந்து நோக்கி பயணமானார்.
பிரதி நிதியமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ Anil Jayantha Fernando மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் பிரதமருடன் பயணித்துள்ளனர்.
23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார்.
முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்தும் அவர் கலந்துரையாடல்களை நடத்துவார் என தெரியவருகின்றது.





