இராஜதந்திர வெற்றியோடு நாடு திரும்பினார் பிரதமர்!
உலக பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya இன்று (23) பிற்பகல் நாடு திரும்பினார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற குறித்த மாநாட்டுக்கு இணையாக பிரதமர் பல முக்கியத்துவமிக்க மற்றும் வெற்றிகரமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார்.
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் உட்பட சர்வதேச அமைப்புகளின் முக்கியஸ்தர்களை சந்தித்திருந்தார்.
மேலும், சிங்கப்பூர் ஜனாதிபதியுடனும் முக்கிய கலந்துரையாடலை நடத்தினார்.
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் புலம்பெயர் இலங்கையர்களையும் இவ்விஜயத்தின்போது பிரதமர் சந்தித்தார்.
சுவிஸில் உள்ள சில வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார்.
இலங்கையின் பொருளாதார மீட்சி, சுற்றுலாத்துறை மேம்பாடு மற்றும் வெளிநாட்டு முதலீடு என்பவற்றை இலக்காகக்கொண்டே பிரதமரின் சந்திப்புகள் நடைபெற்றன.
பிரதமருடன் அமைச்சர் அணில் பெர்ணான்டோவும் மாநாட்டில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரமரின் சுவிட்சர்லாந்து பயணம் இராஜதந்திர ரீதியில் வெற்றிகரமாக அமைந்ததாக ஆளுங்கட்சியினர் தெரிவித்தனர்.





