இலங்கைக்காக பிரதமர் மோடி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு! ஜெய்சங்கர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!!
இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் பணிகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று (23) நடைபெற்ற சந்திப்பின்போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
மேற்படி சந்திப்பு இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட விசேட கடிதத்தையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கையளித்தார்.
டீத்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களின் நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு முயற்சிகளுக்கும், இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும் இந்திய உதவிகளை வழங்கியது.
இது விடயத்தில் இந்தியப் பிரதமரும், அரசாங்கமும் அளித்த மனப்பூர்வமான ஆதரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றியுடன் பாராட்டினார்.
ஒவ்வொரு கடினமான சமயத்திலும் இந்தியா இலங்கைக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவை ஜனாதிபதி நினைவூட்டினார்.
பேரழிவுக்குப் பிறகு இலங்கையின் மீளமைப்பு செயற்பாட்டிற்கு வழங்கும் ஒத்துழைப்பு இந்திய- இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த கடினமான சமயத்தில் இலங்கையுடன் பலமாக இணைந்திருக்கவும், இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் பணிகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளை வழங்கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனக்கு அறிவுறுத்தியுள்ளார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் இதன்போது கூறினார்.
அந்த முயற்சிகளை ஆராய்வதற்காக இந்தியப் பிரதமரின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு தான் விஜயம் மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை, இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் சலுகைப் பொதியொன்ற இந்தியா முன்வைத்துள்ளது. இதில், 100 மில்லியன் டொலர் இந்திய உதவி என்பதோடு மீதமுள்ள தொகை சலுகை வட்டி விகிதத்தின் அடிப்படையிலான கடனாகும்.





