இந்தியா வந்த ரஷ்ய ஜனாதிபதியை விமான நிலையத்தில் வரவேற்ற பிரதமர் மோடி
இரண்டு நாள் பயணமாக ரஷ்ய(Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) இன்று தலைநகர் டெல்லி(Delhi) வந்தடைந்துள்ளார்.
இந்நிலையில், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில்(Indira Gandhi International Airport) ரஷ்ய ஜனாதிபதியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கட்டியணைத்து வரவேற்றுள்ளார்.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு ரஷ்யத் தலைவர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
டெல்லியில் நடைபெறவுள்ள 23வது இந்தியா- ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவே புடினின் வருகை இடம்பெற்றுள்ளது.
இந்த பயணத்தின் போது இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு(Droupadi Murmu) மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை(S. Jaishankar) புடின் சந்திக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





