உலகம் செய்தி

புடினுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

ரஷ்யாவில் அதிபருக்கான தேர்தல் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. நேற்றுடன் தேர்தல் முடிவடைந்த நிலையில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தற்போது அதிபராக இருக்கும் புதின் மீண்டும் வெற்றி பெற்றார்.

அவர் 87.8 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதன்மூலம் 71 வயதான புதின், அடுத்த 6 ஆண்டுக்கு ரஷ்யாவின் அதிபராக நீடிப்பார்.

இந்நிலையில், ரஷ்ய அதிபராக மீண்டும் தேர்வாகியுள்ள விளாடிமிர் புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விளாடிமிர் புடினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான சிறப்பான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட எதிர்நோக்குகிறோம்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!