பிரதமர் ஹரிணி என் ஆசிரியை – சஜித்
இந்த நாட்டின் பிரதமர் ஹரிணி அமர சூரிய நான் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் இளமானிப் பட்டப் படிப்புக்காக கற்று கொகொண்டிருக்கும் போது ஒரு பாடத்தின் ஆசிரியராகவும் கடமையாற்றினார்.
ஒரு சிறந்த விரிவுரையாளராகவும் விளங்கினார் என கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றில் புகழாரம் சூடினார்
தனது கல்வித் தலைமை குறித்து ஒரு சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வந்தனர் நான் பொறுமையாகவும் நிதானமாகவும் இருந்தேன்.
நான் இங்கிலாந்து அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இணைந்த பல்கலைக்கழகங்களிலும் க.பொ.த சாதாரண தர உயர்தர பரீட்சைகள் எழுதி பட்டப் படிப்பை முடித்து முதுமாணிப் பட்டத்தை படித்துக் கொண்டிருந்தபோது எனது தந்தை படுகொலை செய்யப்பட்டார்.
அதன் பின் இலங்கைக்கு வந்த பிறகும் முதுமாணிப் பட்டத்தை நிறைவு செய்ய முயற்சித்தேன்.
ஆனால் தந்தையின் மறைவின் பின் அரசியலை தழுவ வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டேன் என நீண்ட உரை நிகழ்த்தினார்.