சீனாவிற்கு பயணமான பிரதமர் தினேஷ்

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன, இன்று (15) காலை குன்மிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
சீனாவின் யுனான் மாகாணத்துக்கான தனது விஜயத்தை முன்னிட்டு அவர் நேற்று மாலை கொழும்பிலிருந்து புறப்பட்டதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன வர்த்தக அமைச்சு மற்றும் யுவான் மாகாண அரசு இணைந்து நடத்தும் 7ஆவது சீன – தெற்காசிய எக்ஸ்போ கண்காட்சி மற்றும் 27ஆவது சீனா குன்மிங் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கண்காட்சி ஆகியவற்றில் பிரதம அதிதியாக இலங்கை பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார்.
சீனாவின் குன்மிங்கில் நாளை (16) முதல் 20 வரை இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது.
(Visited 10 times, 1 visits today)