பிரித்தானியாவில் காய்கறிகளைப் பயிரிட்டு விற்று பணம் சம்பாதிக்கும் ஆரம்ப பாடசாலை மாணவர்கள்
பிரித்தானியாவில் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் பழங்கள், காய்கறிகளைப் பயிரிட்டு உணவகங்களுக்கும் கடைகளுக்கும் விற்று வருகின்றனர்.
Wicor ஆரம்ப பாடசாலையில் 16 ஆண்டுகளாக இந்தத் தோட்ட வேலை நடந்துவருவதாக தெரியவந்துள்ளது.
இதன் மூலம் பாடசாலைகள் ஆண்டுக்கு 5,000 முதல் 8,000 பவுண்ட் வரை வருமானம் ஈட்டுகிறது.
தோட்ட வேலைக்குத் தேவையான பொருள்கள், உரம் ஆகியவற்றை வாங்க அந்தப் பணம் பயன்படுத்தப்படுகிறது.
காய்கறிகளை வாங்குவோரில் சிலர் அந்தப் பாடசாலைகளின் முன்னாள் மாணவர்கள் என கூறப்படுகின்றது.
வெங்காயம், பூண்டு தவிர்த்து சில அரிய வகை காய்கறிகளும் பயிரிடப்பட்டுள்ளன. பாடசாலையில் தொடங்கிய தோட்ட வேலையைச் சில மாணவர்கள் வீட்டிலும் செய்கின்றனர்.
மாணவர்களை இயற்கையுடன் இணைக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாகப் பாடசாலை கூறுகிறது.
(Visited 1 times, 1 visits today)




