இலங்கையில் உச்சம் தொட்ட மரக்கறி மற்றும் மீனின் விலைகள்!
இலங்கையில் பண்டிகைக் காலங்களைத் தொடர்ந்து தொடர்ச்சியாக மரக்கறிகளின் விலை உச்சம் கண்டு வருவதாக பொருளாதார மத்திய நிலையங்களின் தரவுகள் தெரிவித்துள்ளன.
இதன்படி ஒரு கிலோ காரட் சுமார் ஆயிரம் ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி இரண்டாயிரம் ரூபாயை நெருங்குவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் மீன் மார்க்கெட்டில் மொத்த விலையும் நுகர்வோரால் தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
இதன்படி பேலியகொடை மீன் மார்க்கெட்டில் கெரவல் மீனின் கிலோவொன்றின் விலை 2000 ரூபாவாகவும், பாலையா 1000 ரூபாவாகவும், தோரை 1,800 ரூபாவாகவும், பாறை மீன் 1,500 ரூபாவாகவும், லின்னா 800 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக பயிர்கள் அழிந்து வருவதே இதற்கு காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் நுகர்வோருக்கு விற்பனை செய்யும் விலைக்கு நிகராக விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்படுவதில்லை என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.