செய்தி

இலங்கையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலையில் திருத்தம்!

இலங்கையில் ஆறு அத்தியாவசிய பொருட்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை வரம்புகள் திருத்தப்பட்டுள்ளன.

விற்பனையாளர்கள் பொருட்களில் அதிக இலாபம் ஈட்டுவதை தடுத்து, நுகர்வோருக்கு சாதகதன்மையை ஏற்படுத்தும் வகையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, காய்ந்த மிளகாய், வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், இறக்குமதி உருளைக்கிழங்கு, மைசூர் பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கான அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாய் 870 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 265 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் இறக்குமதி பெரிய வெங்காயம் 320 ரூபாயாகவும் அதிகபட்ச மொத்த விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 120 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் பருப்பு 295 ரூபாயாக அதிகபட்ச மொத்த விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!