இலங்கையில் பலதரப்பட்ட உணவு வகைகளுக்கான விலை குறைப்பு!

மின்சாரக் கட்டணக் குறைப்பிற்கு நிவாரணமாக இன்று (16.07) நள்ளிரவு முதல் பல வகையான உணவு வகைகளின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், சாதாரண சோற்று பொதி ஒன்றின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, சோறு பார்சல் மற்றும் கொத்துவின் விலை 25 ரூபாவினாலும், பராட்டா, முட்டை ரொட்டி மற்றும் சிற்றுண்டியின் விலை 10 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது.
ஒரு சாதாரண தேநீர் 5 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இச்சலுகையை வழங்குவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உணவகங்களை தலைவர் கேட்டுக் கொண்டார்.
(Visited 67 times, 1 visits today)