இலங்கையில் டின் மீன்களுக்கான கட்டுப்பாடு விலை நிர்ணயம்!
இலங்கையில் டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 425 கிராம் டின் சூரை மற்றும் சால்மன் மீன் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 380 ரூபாவாகவும், 155 கிராம் நிகர எடை கொண்ட கானாங்கெளுத்தியின் அதிகபட்ச சில்லறை விலை 180 ரூபாவாகும்.
மேலும், 425 கிராம் நிகர எடை கொண்ட பலா கானாங்கெளுத்தி சால்மன் மீன் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 560 ரூபாவாக இருக்கும்.
குறித்த விலைகள் இன்று (28) முதல் அமுலுக்கு வரும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
(Visited 91 times, 1 visits today)





