இலங்கை

ஜனாதிபதியின் இலக்கு அடுத்த தலைமுறைக்கு நல்லிணக்க பணியை வழங்குவது அல்ல – சமன் ஏக்கநாயக்க

இலங்கையில் நல்லிணக்கத்தை அடுத்த தலைமுறைக்குக் கொடுப்பது அல்ல, அதற்கு இப்போதே தீர்வு காண்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இலக்காகும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டிய தேவை வலுவாக உள்ளதாகவும், இந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் மேலும் ஒரு வருடத்திற்கு ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு நாடு செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு  இதனை  (PMD) தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில் நேற்று (11) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான சிவில் சமூக விழிப்புணர்வு கலந்துரையாடலின் போதே சமன் ஏக்கநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையின் நோக்கங்களை விளக்கினார், மேலும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பங்கு பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஆணைக்குழு ஸ்தாபனத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவது தொடர்பில் கலந்துகொண்ட சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்டறிந்த ஏக்கநாயக்க, நல்லிணக்கச் செயற்பாடுகளை வெற்றியடையச் செய்வதற்கு அனைவரினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு நாடாக முன்னேற அனைத்து குடிமக்களின் உடன்பாடும் ஆதரவும் அவசியம் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்