இலங்கை செய்தி

வலுசக்தி பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு!

மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராயப்பட்டுள்ளன.

இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக வலுசக்தி விநியோகக் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளதால், உலக நாடுகள் அனைத்தும் எதிர்கொண்டுள்ள வலுசக்தி நெருக்கடி மற்றும் அதன் விளைவாக எதிர்வரும் மாதங்களில் உலக சந்தையில் ஏற்படக்கூடிய புதிய போக்குகள் குறித்து விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.

தற்போதைய நெருக்கடி நிலையால் இலங்கை பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையிலும், 2025 ஆம் ஆண்டில் எட்டப்பட்ட பொருளாதார வெற்றிகளை நிலைபேறாக முன்னெடுத்துச் செல்லும் வகையிலும், தடையற்ற வலுசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்துமாறும், பொருளாதார சுருக்கத்தை குறைக்கும் வகையில் விலைகளை முகாமைத்துவம் செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இதற்காக நிவாரணத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க உட்பட பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!