‘ஜனாதிபதி அன்பளிப்பு’- இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

‘ஜனாதிபதி அன்பளிப்பு’ எனும் பெயரில் பரிமாறப்படும் போலி செய்தி தொடர்பில் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இது தொடர்பில் விளக்கம் அளித்துள்ளது.
தற்போது இவ்வாறானதொரு வேலைத்திட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் போலியான செய்திகள் பரவி வருவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான பொய்யான செய்திகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது பகிரவோ வேண்டாம் என அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
(Visited 42 times, 1 visits today)