இலங்கை

விரைவில் ஜனாதிபதித் தேர்தல் : சஜித் அணியுடன் கைகோர்க்கும் ஜீ.எல்.பீரிஸ்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனது குழுவினர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 17 மற்றும் ஒக்டோபர் 17 க்கு இடையில் நடத்தப்பட வேண்டும் என்றும் புதிய ஜனாதிபதி நவம்பர் 17 க்கு முன்னர் பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும் என்றும் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை இவ்வருடம் ஜூலை மாத இறுதியில் அல்லது ஓகஸ்ட் தொடக்கத்தில் அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு கடமைப்பட்டிருப்பதாகவும், இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படாவிட்டால், நவம்பர் 18ஆம் திகதிக்கு பின்னர் அரசாங்கம் அதற்கு இணங்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது ஜி. எல். பீரிஸ் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏனைய உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!