வட அமெரிக்கா

அதிபர் தேர்தல் நிலவரம்: டிரம்ப்புக்கும் ஹாரிசுக்கும் இடையே நிலவும் கடும் போட்டி

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் துணை அதிபர் கமலா ஹாரிசும் பிரசாரத்தின் இறுதிக் கட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கும் நிலையில், அவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு இடையிலான விவாதம் செப்டம்பர் 10ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில்,ஹாரிசைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டியிருப்பதாகச் சில வாக்காளர்கள் கூறியுள்ளனர்.

நியூயார்க் டைம்சும் சியென்னா கல்லூரியும் நடத்திய தேசிய அளவிலான கருத்துக்கணிப்பு ஒன்றில், டோனல்ட் டிரம்ப் 48 சதவீதம் வாக்குகளுடன் முன்னிலையில் இருந்தார். ஹாரிஸ் 47 சதவீதம் வாக்குகளைப் பெற்றார்.

டிரம்ப்புக்கான ஆதரவு தொடர்வதை அந்தக் கருத்துக்கணிப்பு காட்டுகிறது. அதிபர் தேர்தலுக்கான முடிவுகளை நிர்ணயிக்கும் ஏழு முக்கிய மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின் முடிவுகளோடு தேசிய கருத்துக்கணிப்பின் முடிவுகளும் ஒத்துப்போகின்றன.

அவற்றில் ஹாரிசுக்கும் டிரம்ப்புக்கும் ஒரே வாக்குகள் அல்லத ஹாரிஸ் சற்று முன்னிலையில் இருப்பதாக ‘டைம்ஸ்’ கருத்துக்கணிப்புகளின் சராசரி முடிவுகள் காட்டுகின்றன. ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால், அவர்களில் யார் வேண்டுமானாலும் வெற்றிபெறலாம் அல்லது தோல்வியுறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஏறக்குறைய எட்டு வாரங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. டிரம்ப் மீதான கருத்துகள் பெருமளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஹாரிசைப் பற்றி பலரும் இன்னும் அறிந்திருக்கவில்லை.

அந்த வகையில், புதிய கருத்துக்கணிப்பில் 28 சதவீதத்தினர் ஹாரிசைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறினர். டிரம்ப்பைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று 9 சதவீத்த்திறர் மட்டுமே குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

(Visited 24 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!